சரயு நதி தீர்த்தக் குடங்கள், அயோத்தியாவில் இருந்து எடுத்து வரப்பட்டன.
அங்கு தொடங்கி, சீதா எலிய வரை, இவை தரையிலே வைக்கப்படவில்லை.
திரு பாலா ராவ் அவர்களின் பெருமுயற்சியில் இவை எடுத்து வரப்பட்டன. இவற்றைத் திரு. V. இராதாகிருஷ்ணன், கமிட்டி தலைவர் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.
விமான நிலையத்தில் அற்புதமான நடன நிகழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்கப் பட்டது.
கலைஞர்கள் மிக உற்சாகத்துடன் நடனம் ஆடினர்.
நிர்வாகக் குழு உறுப்பினர்கள் புனித தீர்த்தத்தை எடுத்து வருகிறார்கள்.
ரத யாத்திரை கொழும்புவில் இருந்து தொடங்குகிறது.
ரதத்தில் புனித தீர்த்தக் குடங்கள் அலங்கரித்து வைக்கப் பட்டுள்ளன.
கோபுரக் கலசங்கள் யாக சாலையில் பூசிக்கப் படுகின்றன.
யாக சாலை மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஆசாரியர்கள் பக்தி சிரத்தையுடன் ஹோமங்களை நடத்தினார்கள்.
ஏராளமான பக்தர்கள் பூசைகளில் கலந்து கொண்டனர்.
சரயு தீர்த்தக் குடங்கள் யாக சாலையில் பூசிக்கப் படுகின்றன.
18-மே-2024 அன்று எண்ணெய் காப்பு இடப்பட்டது.
காலை 6.30 மணி முதல் மாலை 7 மணி வரை, ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தீர்த்தக் குடங்கள் யாகசாலையில் இருந்து புறப்படுகின்றன.
குடமுழுக்கு விழாவைக் காண ஏராளமான பக்தர்கள் குழுமி உள்ளனர்.
குடமுழுக்கு விழாவைக் காண வந்த பக்தர் கூட்டத்தின் ஒரு பகுதி.
குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. ஜெய் சீதா ராம்.