சீதை அம்மன் கோவில் இணைய தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
சீதா தேவி திருஉருவச்சிலை
சரயு நதி தீர்த்தக் குடங்கள்
001
தல வரலாறு
சீதா தேவியை இராவணன் இந்த அசோக வனத்தில் தான் சிறை வைத்திருந்ததாக ஐதீகம்.
அனுமான் இங்கு வந்து சீதையிடம் இராமன் கொடுத்த கணையாழியை அளித்தார்.
சீதை கொடுத்த சூடாமணியைப் பெற்றுக் கொண்டார்.
002
நடப்புகள்
19-5-2024 ஞாயிறு அன்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
4000க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு, குடமுழுக்கு தரிசனம் செய்தனர்.
003
சுந்தர காண்டம்
இராமாயணத்தில் சுந்தர காண்டம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இதனைப் பாராயணம் செய்பவர்களுக்குச் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
பாகம் 1.
பாகம் 2.
001
வேண்டுகோள்
பக்தர்கள் தங்களுக்குத் தெரிந்த உறவினர்களையும், நண்பர்களையும், சீதை அம்மன் கோவிலுக்குச் சென்று ஒரு முறையாவது தரிசனம் செய்து வருக என்று கேட்டுக் கொள்ளவும்.
உலகில் மிகச்சிறந்த புனிதத் தலங்களில் ஒன்றான இந்தத் தலத்துக்கு மிக அதிக அளவில் அடியவர்கள் வருகை தரவேண்டும் என்பது எங்கள் அவா.
001
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
டாக்டர். V. இராதாகிருஷ்ணன் அவர்கள். கமிட்டி தலைவர்.
5000 திருப்பதி லட்டு ப்ரசாதம்
சரயு நதி தீர்த்தம் இலங்கை வருகை
காஞ்சி மாமுனிவரின் அருள்வாக்கு
ஆஞ்சநேயரால்தான் தாங்கள் காப்பாற்றப் பட்டது போல் ராமரும் சீதையும் சொல்லிக்கொண்டார்கள். சீதையின் ப்ராணனை ரக்ஷித்துக் கொடுத்தது, சீதைக்கும் மேல் தமக்கு ப்ரியமான லக்ஷ்மணன் மூர்ச்சையாய் விழுந்தபோது சஞ்ஜீவி கொண்டுவந்து அவனை எழுப்பினது முதலானவற்றுக்காகத் தாம் ஆஞ்சநேயருக்குத் தீர்க்க முடியாத நன்றிக்கடன் பட்டிருப்பதாகவேராமர் எப்போதும் சொல்வார். “ஆஞ்ஜநேயருக்கு எப்படி என்ன ப்ரத்யுபகாரம் பண்ணுவோம், பண்ணுவோம்?” என்றே சீதைக்கும் சதா இருந்தது.
முதல் முதலாக அவரை ரிச்யமுக பர்வதத்தில் பார்த்த வுடனேயே ராமசந்திரமூர்த்தி, இவரால்தான் இனி ராமாயணம் நடந்தாக வேண்டும் என்று தீர்மானம் பண்ணி விட்டார். அப்போது ஹனுமாரைச் சகாயமாகப் பெற்றிருந்தும் சுக்ரீவன் பெண்டாட்டியை இழந்து வாலியிடம் கஷ்டப் பட்டுக்கொண்டிருந்தான். ராமர் இன்னார் என்று வேவு பார்த்து, அவர் நல்லவர், சக்தி உள்ளவர் என்று தெரிந்ததால் அவரைத் துணையாகக் கொண்டு வாலியை ஜயிக்க வேண்டும் என்பதற்குத்தான் ஹனுமாரை அவரிடம் அனுப்பியிருந்தான்.இப்படிப்பட்ட நிலையில் சந்தித்த போதிலும் ராமருக்கோ தனக்கேபலமாக இருக்கப் போவது இந்த ஹனுமார்தான் என்று தெரிந்துவிட்டது. அவரே ஈச்வரனாகயிருந்து பூர்வத்தில் பண்ணின சங்கல்பம்தானே இப்படி இப்படி இந்த ராமாயண நாடகம் நடக்கவேண்டுமென்று?
ராமாயணத்தில் சர்வ காரிய சித்தி என்று சகலராலும் பாராயணம் செய்யப்படுவது எது என்றால் ராமருடைய பெருமைகள் தெரிகிற பாக்கி ஆறு காண்டமில்லை; ஆஞ்சநேய ப்ராபவமேவிஷயமாயுள்ள சுந்தர காண்டம்தான்! அப்படி இவரைப் பார்த்தவுடனேயே “ராமாயணத் தேரை இனிமேல் நீயே கொண்டுபோ” என்று ராமர் கொடுத்துவிட்டார்.தம்முடைய நாமாவை அவர் மூலம் வெளியிட்டே சீதை உயிரை விடாமல் காப்பாற்றினார். தம்முடைய நாமாவினாலேயே அவர் பரம சுலபமாக சமுத்திரத்தைத் தாண்டச் செய்தார். தாமே லங்கைக்குப் போகிற போதோ கஷ்டப்பட்டு அணை கட்டிக்கொண்டு அதன் மேல் நடந்துதான் போனார்!
தாம் செய்வதெல்லாம் ராமர் போட்ட பிச்சையே! சீதாதேவியின் அனுக்ரஹ லேசமே!” என்றுதான் ஆஞ்சநேயர் நினைத்தார். ‘ஸாகரதரணமும், லங்கா தஹனமும் தன் காரியமென்று லோகம் கொண்டாடுகிறதே! நிஜத்தில் அவருடைய நாமம் – தாரக நாமமல்லவா தரணம் பண்ணுவித்தது? அவளுடைய சோகமே அல்லவா தகனம் பண்ணிற்று?” என்றே நினைத்தார். தங்கள் காரியத்துக்கு நம்மையும் ப்ரயோஜனப்படுத்திக் கொண்டார் களே என்று சீதாராமர்களிடம் ஒரே நன்றி, தீர்க்க முடியாத நன்றிக் கடன்பட்டிருப்பதாகவே நினைத்தார்.நமக்கானால், நன்றி வாங்கிக் கொள்வதில் போட்டி! ‘நாம் பலருக்கு உபகரித்தோம். யாரும் சரியாக நமக்குத் திருப்பவில்லை’ என்று அபிப்ராயம்! சீதா-ராமர்களுக்கும் ஆஞ்சநேயருக்குமோ பரஸ்பரம்மற்றவரால்தான் தங்களுக்கு பலம், அவருக்குத் தாங்கள் ப்ரத்யுபகாரமே பண்ணி முடியாது என்று அபிப்ராயம்.இது ராமாயணத்திலே நமக்கு ஒரு பெரிய பாடம்.